பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், அவரது அமைச்சர்களும் , தமிழக முதல்வர் அம்மா அவர்களும் அவரது அமைச்சர்களும் ,அணைத்துக் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் , தொண்டு நிறுவனங்களும் ,இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவ அமைப்புகளும் ,இந்து அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு மழையால் பாதிக்கப்பட பகுதியை இரும்புக் கரங்களால் தடுத்துக் காத்துக்கொண்டன . கேரள மக்கள் மற்றும் அரசு ,கர்நாடக மக்கள் மற்றும் அரசு ,தெலுங்கான அரசு மற்றும் இந்திய மக்கள் , அயல்நாட்டு மக்கள் , அயல் நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் காட்டிய அன்பு நூறாண்டுகளானாலும் மாறாது . இறைவனின் அன்பு இரக்கம் மீண்டும் தமிழ் மண்ணில் வெள்ளமாக வற்றாத ஜீவ நதியாக ஒடுகின்றது

தமிழகத்தில் பணமழை
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் கடந்த 40 நாள் பெய்த பெரும் மழை, மக்களை மட்டுமல்ல,விவசாயம், பொன்,பொருள்கால்நடைகள்,வீடுகள் முற்றிலும் இழந்து நிர்ஆதரவாக உள்ளனர் . இன்று மத்திய அரசு ,தமிழக அரசு பணத்தை பணம் என்று பாராமல் திட்மிட்டு அவர் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகிறது .இது எவ்வித தவறுக்கும் இடம் தராது.